செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்று 09 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (01) 08ஆவது நாளாகவும் அகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் 40 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 49 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 07 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 198 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரையில் 218 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank blank

 

 

 

நன்றி

Leave a Reply