செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் ஆபத்து!

பிரித்தானியாவின் UK Biobank ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வில், செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் சக்கரை, இனிப்புகள், நிறப்பொருட்கள் மற்றும் சுவை சேர்க்கைகள் அதிகமாக உட்கொள்ளப்படும்போது மரண அபாயம் அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிகமாக பதப்படுத்தப்பட்ட  உணவுகள் (Ultra-Processed Foods – UPFs) மற்றும் அதில் உள்ள குறிப்பிட்ட சேர்க்கைகள் (Markers of Ultra-Processing – MUPs) உடல் நலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு உயிர் ஆபத்தையும் ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உணவுகள் அதிக கொழுப்பு, சக்கரை, உப்பு கொண்டவை. ஆனால் அவை நார்ச்சத்து, புரதம், வைட்டமின் குறைவு கொண்டதால், ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மக்கள் இவற்றை அதிகமாக உட்கொள்கின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மொத்த கலோரிகளின் பாதியை UPFs மூலம் பெறுகின்றனர்.

மேலும், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமன், எடை அதிகரிப்பு மற்றும் பல ஆரோக்கிய பிரச்சினைகள் உருவாக்குகின்றன. பிரிட்டிஷ் சூப்பர் மார்க்கெட்டில், சுவை சேர்க்கைகள் மொத்த உணவு உட்கொள்ளலின் 13.6% இடத்தைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.  எனவே ஆரோக்கியம் காக்க, இயற்கை உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் பொதுமக்களை  வலியுறுத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply