சொகுசு கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முதலிடம்: தலைமை செயல் அதிகாரி ​ தகவல்  | Mercedes-Benz tops luxury car sales

புனே: இந்​தி​யா​வின் சொகுசு கார் விற்​பனை​யில் மெர்​சிடிஸ் பென்ஸ் முதலிடத்​தில் உள்​ள​தாக அந்​நிறு​வனத்​தின் தலைமை செயல் அதி​காரி சந்​தோஷ் ஐயர் கூறி​னார்.

மெர்​சிடிஸ் பென்ஸ் நிறு​வனம் சார்​பில் புனே நகரில் 100 ஏக்​கரில் நிறு​வப்​பட்​டுள்ள கார் உற்​பத்தி ஆலை​யில் அனைத்து ரக பெட்​ரோல், டீசல்

கார்​களு​டன், மின்​சார கார்​களும் தயாரிக்​கப்​படு​கின்​றன. இங்கு பணிபுரி​யும் 800 பேரில் சுமார் 30 சதவீதம் பேர் பெண்​கள். இந்​நிலை​யில், மெர்​சிடிஸ் பென்ஸ் இந்​தியா நிறுவன தலைமை செயல் அதி​காரி சந்​தோஷ் ஐயர் செய்​திாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் ஆண்​டு​தோறும் சராசரி​யாக 50,000 சொகுசு கார்​கள் விற்​பனை​யாகும் நிலை​யில், அதில் 20 ஆயிரம் கார்​கள் பென்ஸ் கார்​களாகும். எங்​கள் நிறு​வனம் செயல்​திறன், தொழில்​நுட்​பம் மற்​றும் பாது​காப்​பில் மிகுந்த கவனம் செலுத்​துகிறது.

சொகுசு கார்​களின் விலை கடந்த 5 ஆண்​டு​களில் 2 மடங்கு அதி​கரித்​திருந்​தா​லும், விற்​பனை​யும் அதி​கரித்து வரு​கிறது, குறிப்​பாக, பெண் வாடிக்​கை​யாளர்​கள் 15 சதவீதம் வரை அதி​கரித்​துள்​ளனர். பென்ஸ் நிறுவன சேவை மையங்​கள், வாடிக்​கை​யாளர் வீட்​டில் இருந்து அதி​கபட்​சம் ஒரு மணி நேரத்​துக்​குள் செல்​லும் வகை​யில் அமைக்​கப்​பட்​டுள்​ளன. எங்​கள் மின்​சார கார்​களுக்கு ஒரு​முறை சார்ஜ் செய்​தால் 600 கி.மீ. வரை இயக்​கலாம். ஜிஎஸ்டி மறுசீரமைப்​புக்​குப் பின்​னர் கார்​களின் விற்​பனை அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக, டீசல் கார்​கள் விற்​பனை 40 சதவீதம் வரை அதி​கரித்​துள்​ளது.

தமிழகத்​தில் 2 மற்​றும் 3-ம் நிலை நகரங்​களி​லும் விற்​பனை அதி​கரித்து வரு​கிறது. அண்​மை​யில் கோவை​யில் விற்​பனை மையம் தொடங்​கி​யுள்​ளோம். தமிழகத்​தில் எஸ்​யுவி ரக கார்​களை​விட செடான் ரக கார்​கள் அதிக அளவில் விற்​பனை​யாகி​யுள்​ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

நன்றி

Leave a Reply