ஜனாதிபதியை அவமதித்தவருக்கு மரணதண்டனை

  துனிசியாவில் சமூக ஊடகங்களில்  அந்நாட்டு ஜனாதிபதியை அவமதித்தமைக்காக , ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம்  மரண தண்டனை விதித்துள்ளது. 
 இந்த தண்டனை ஜனாதிபதியை அவமதித்ததற்காகவும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்ததற்காகவும் விதிக்கப்பட்டதாக துனிசிய மனித உரிமைகள் லீக் தலைவர்  தெரிவித்துள்ளார்.
2021இல் துனிசியாவில்  ஜனாதிபதி கைஸ் சயீத் ஆட்சி  அமைந்ததிலிருந்து அந்நாட்டில்   கருத்து சுதந்திரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  56 வயதான கல்வி குறைவான சாதாரண தொழிலாளி ஒருவருக்கே இந்த மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 தனது கட்சிக்காரருக்கு  முகப்புத்தக  பதிவுகளுக்காக மரண தண்டனை விதித்ததாகவும்    இது அதிர்ச்சியூட்டும் மற்றும் முன்னெப்போதும் இல்லாத முடிவு என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டுள்ளதாகவும்  அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். .
துனிசிய நீதிமன்றங்கள் பல சமயங்களில் மரண தண்டனை விதித்திருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ஜனாதிபதியை அவமதித்தவருக்கு மரணதண்டனை appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply