⭕️ எந்த குற்றத்தையும் காலத்தின் போக்கில் மறைக்கப்பட இடமளிக்க மாட்டேன்.
⭕️ மக்களின் மரியாதை, நம்பிக்கை நெருக்கம் கொண்ட நவீன பொலிஸ் திணைக்களத்தை உருவாக்க கைகோர்ப்போம்.
⭕️ தங்கள் கடமைகளை முறையாகச் செய்யும் பொலிஸ் அதிகாரிகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
⭕️ பொலிஸில் பணியாற்றும் சுமார் 84,000 பேரில் ஒரு சிலர் செய்யும் விடயங்கள் முழு பொலிஸ் திணைக்களத்திற்கும் அவமரியாதையை ஏற்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
⭕️ கண்டுபிடிக்க முடியாத ஒவ்வொரு குற்றத்திற்கும் பின்னால், அரசியல் சக்தி இருந்தது.
⭕️. நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் உங்கள் கடமையை நிறைவேற்ற நீங்கள் அச்சமின்றி முன்வர வேண்டும்.
⭕️ நம் நாடு ஒரு பெரிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் மட்டுமே காணப்பட்ட போதைப்பொருள் அச்சுறுத்தல், இப்போது தொலைதூர கிராமங்களையும் சூழ்ந்துள்ளது. இன்று, நம் பிள்ளைகள் போதைப்பொருட்களுக்கு பலியாகிவிட்டனர். இது இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஏராளமான குடும்பங்களை வறுமையின் ஆழத்திற்குத் தள்ளியுள்ளது. இந்த விடயத்தில் அரசியல் தலையீடு இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
⭕️ அதிகாரிகள் அந்த பழைய பழக்கத்தை கைவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், நீங்கள் பணியில் இருந்து இராஜினாமா செய்யுங்கள். நீங்கள் அதை தானாக முன்வந்து செய்யவில்லை என்றால், உங்களை பணிநீக்கம் செய்வது குறித்து நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.
⭕️ ஒரு நாடாக நாம் அடையும் பொருளாதார வெற்றிகள் மற்றும் நன்மைகளை மக்களுக்கு வழங்குவோம். இதன் விளைவாக, நீங்கள் பெறும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கும், இதனால் நீங்கள் மிகவும் வசதியான வாழ்க்கை வாழ முடியும்.
159 ஆவது பொலிஸ் தின நிகழ்சில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை