ஜனாதிபதி உட்பட தேசிய மக்கள் சக்தியினர் சிறைக்கு செல்ல நேரிடும்!-உதயகம்மன்பில – Athavan News

சொத்துவிபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர்  இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” லட்சக்கணக்கான சொத்துக்களை வைத்துள்ள மக்கள் விடுதலை முன்னணியினர் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காது உள்ளமை சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.

இந்த நாட்டின் ஜனாதிபதி வரலாற்றில் முதற்தடவையாக 2025 மே மாதம் 25 ஆம் திகதி தனியார் ஜெட் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். எனவே அடுத்துவரும் சொத்துவிபர அறிக்கையில் இந்த விபரங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாத்திரம் இந்த தவறை இழைக்கவில்லை.

அமைச்சர் நளின் ஹேவகேவின் வங்கிக்கணக்கில் 23 லட்சம் ரூபா பணம் இருந்தது. அவரது மகளின் பிறந்தநாளுக்கு பரிசாக கிடைத்த பணம் என்று கூறியிருந்தார்.அவ்வாறாயின் 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக பணத்தினை பரிசாக வழங்கியவர்கள் இருந்துள்ளனர்.

அவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும். சொத்துக்களை அபகரிப்பு சொத்துவிபரங்களை மறைத்தல் ஆகியன பாரிய குற்றமாகும். எனவே எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply