இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் டொலர் அவசர நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளது.
அதிக பாதிப்புக்குள்ளான கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள மக்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இடம்பெயர்வு முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகளை கொள்வனவு செய்ய முடியும்.
கண்டி, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிட வசதிகள், சமையல் உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதிகளை வழங்க ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது.
அதேநேரம், மத்திய, ஊவா, கிழக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்ய 5 இலட்சம் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் முகாம்களில் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கவும், சேதமடைந்த நீர் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

