குமரி மாவட்டத்தில் ஒரு முஸ்லிம், ஜமாஅத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு வராத நபர்கள் குறித்து கணக்கெடுத்து அபராதம் கூட விதிக்கப்பட்டுள்ளது என்பது வேறு எங்கும் கேட்டிராத தகவல்.
குமரி மாவட்ட கடலோர முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான பூத்துறை முஸ்லிம் ஜமாஅத்தில் சுமார் 35 அல்லது 40 வருடங்கள் முன்பு இது நடைமுறையில் இருந்துள்ளது.
ஏனைய ஜமாஅத்களுடன் ஒப்பிடும் போது பூத்துறையில் குடும்பங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததும் அவர்களில் பெரும்பாலும் கூலித் தொழில் செய்து வந்தனர்.
வெளியூரில் படிக்க செல்பவர்கள், வேலை விஷயமாக செல்பவர்கள் தவிர்த்து உள்ளூரில் இருந்தும் ஜும்மா தொழுகைக்கு வாரந்தோறும் வராதவர்கள் வேறு பணிகளில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்களையும் கட்டாயம் தொழுகைக்கு வரவைக்க அன்றைய ஜமாஅத் நிர்வாகம் “வருகைப்பதிவேடு” முறையை கடைபிடிக்க துவங்கினர்.
ஒவ்வொரு வாரமும் ஜும்மா தொழுகைக்கு வராதவர்கள் விபரம் சேகரித்து அவர்களையும் தொழுவதற்கு வர அறிவுறுத்தப்படுவதுடன், தொடர்ந்து வராத நபர்களுக்கு சிறிய அபராதம் கூட விதிக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு.
தற்போது பூத்துறை முஸ்லிம் ஜமாஅத் எல்லைகள் விரிவடைந்து, அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டதுடன் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலுடன், மதரஸா, வணிக வளாகம் என்று சிறப்பாகவே உள்ளது..
Colachel Azheem