(ஹைதர் அலி)
இந்த புகைப்படத்தில் முடமாகி கிடப்பவர் அஞ்சல் கிங்.
டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதியை இடித்தவர்களில் அஞ்சல் சிங்கும் ஒருவர்.
“ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷத்துடன், அவர்கள் மசூதியை இடிக்கத் தொடங்கினர், சிறிது நேரத்திற்குள் டூமின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது அஞ்சல் சிங்கும் இடிபாடுகளுக்குள் விழுந்தார் அவரின் சுயநினைவு திரும்பியபோது, அவரது இரண்டு கால்களும் செயலிழந்து, நிற்கவோ அல்லது எந்த வேலையும் செய்யவோ முடியாமல், உடலின் பாதி ஊனமுற்றிருந்தது.
இது நடந்து 26 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் எந்த இந்துத்துவா அமைப்பும் அவருக்கு உதவி வழங்கவில்லை, ஒரு கிளாஸ் தண்ணீர் கூட வழங்கவில்லை.
மிகவும் வறுமையில் கைவிடப்பட்ட அவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர் அவரது மனைவி அன்றாட கூலி வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.
ஏய்த வில் அரியாசனத்தில் அரசனின் கையில் அதிகாரத்திலிற்க ஏயப் பட்ட அம்புகள் அடிபட்டு கிடக்கின்றன ஊனமாகி.
ஆர்.எஸ்.எஸ். பிஜேபியை நம்பி அடியாள் வேலை செய்யும் பிற்படுத்தப் பட்ட, அடித்தட்டு மக்களின் நிலை இதுதான்.

