பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டயனா கமகே இன்று(25) நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, குற்றம் சாட்டப்பட்ட டயனா கமகேவை 10 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் டயனா கமகே மீது தாக்கல் செய்யப்பட்ட ஏழு வழக்குகள் கடந்த தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதன்காரணமாக அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.