டிக்டொக் ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப்–சி ஜின்பிங் தொலைபேசி உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ஆகியோர் நேற்றைய தினம் தொலைபேசி மூலமாக கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்   வெளியாகியுள்ளது.

இக் கலந்துரையாடலின் போது  டிக்டொக் பயன்பாட்டின் எதிர்காலம் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக  பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் மாதத்திற்குப் பின் இருவருக்குமிடையே இடம்பெற்ற  முதல் உரையாடல் இது எனக் கூறப்படுகின்றது.

இக் கலந்துரையாடலையடுத்து  “டிக்டொக் ஒப்பந்தம்  குறித்து முன்னேற்றம் காணப்பட்டுள்ளது” என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தாலும், இது தொடர்பில் இறுதி ஒப்புதல் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலின் போது  இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் வர்த்தகப் போர், அமெரிக்க வர்த்தகத் தடைகள், ரஷ்யா–உக்ரைன் போர் உள்ளிட்ட பட  விடயங்கள் தொடர்பிலும்  விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதியிடம் வர்த்தகத் தடைகளை தவிர்க்குமாறு சி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வரும் நவம்பர் மாதம்  தென்கொரியாவில் நடைபெறும் ஆசியா–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்திக்க உள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply