அமெரிக்காவின் வெள்ளை மாளிகை டிக்டொக் கணக்கு ஒன்றை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
டிக்டொக்கில் 170 மில்லியன் அமெரிக்கப் பயனாளர்கள் இருப்பதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் அரசின் திட்டங்களை எளிதில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க உதவும் என்று கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை பின்னுக்குத் தள்ள டிக்டொக் செயலி பெரிதும் உதவியதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது வெள்ளை மாளிகை பெயரிலும் டிக்டொக் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது,இளைஞர்களைக் கவர்வதற்கான ஜனாதிபதி ட்ரம்ப்பின் சூட்சுமமாகவே பார்க்கப்படுகின்றது .