டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது.
‘ஆப்பரேஷன் சிந்துார்’ ராணுவ நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் விதமாக, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் அனைவரும் நன்கு படித்த வைத்தியர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வைத்தியர்களை மூளைச்சலவை செய்திருப்பது விசாரணைகளில் அம்பலமாகி உள்ளது.
இந்நிலையில் சமத்துவம் தொடர்பில் 6 வைத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
