டீசலுக்கு நிகராக உயர்ந்த சிஎன்ஜி எரிபொருள் விலை: தட்டுப்பாடு நிலவுவதால் தேடி அலையும் ஆட்டோ ஓட்டுநர்கள் | CNG price rises to match diesel

சென்னை: சென்​னை​யில் சிஎன்ஜி விலை டீசலுக்கு இணை​யாக உயர்ந்த நிலை​யில், தட்​டுப்​பாடும் நில​வுவ​தாக ஆட்​டோ ஓட்டுநர்​கள் வேதனை தெரிவிக்​கின்​றனர். சுற்​றுச்​சூழல் மாசு​பாடு விவ​காரத்​தில், ஒப்​பீட்​டள​வில் குறை​வான பாதிப்பை ஏற்படுத்து​வது, அதிக மைலேஜ் உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களால் நாடு தழு​விய அளவில் சிஎன்ஜி வாக​னங்​களுக்கு வரவேற்பு நில​வு​கிறது.

இதனால் டீசல், பெட்​ரோல் வாக​னங்​களை​யும் சிஎன்ஜியில் பயன்​படுத்​தும் வகை​யில் மாற்​றியமைக்​கப்​படு​கின்​றன. இதற்​கான தெளி​வான வழி​காட்​டு​தல்​களை​யும் தமிழக போக்​கு​வரத்​துத் துறை வழங்​கி​யுள்​ளது. அதே​நேரம், சென்​னை​யில் தொடர்ச்​சி​யாக சிஎன்ஜி விலை உயர்ந்து வரு​வ​தோடு, தட்​டுப்​பாடும் நில​வுவ​தாக கூறப்​படு​கிறது.

பெட்​ரோல், டீசல் போல சிஎன்ஜி நிலை​யங்​கள் அதி​கள​வில் இல்​லை. சமூக வலை​தளங்​கள் மூலமே சிஎன்ஜி இருப்​பதை உறுதி செய்​யும் நிலை உள்​ளது. மேலும், கடந்த ஓராண்​டில் (2024 ஜூலை முதல்) ரூ.4 என்​றள​வில் சிஎன்ஜி விலை உயர்ந்து டீசல் விலைக்குநிக​ராக வந்​துள்​ளது. இத்​தகைய சூழலில் மிகுந்த சிரமத்​துக்கு ஆளாவ​தாக ஆட்​டோ ஓட்​டுநர்​கள் கூறுகின்​றனர்.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு ஆட்​டோ தொழிலா​ளர் சம்​மேளன செயல்​தலை​வர் எஸ்​.​பாலசுப்​பிரமணி​யம் கூறிய​தாவது: பெட்​ரோல், டீசல் டேங்​கில் இருந்து 500 அடி தொலை​வில் தான் சிஎன்ஜி டேங்க்கை வைக்க வேண்​டும். அரு​கில் 5 மாடி கட்​டிடமோ, பள்​ளி​யோ இருக்க கூடாது என்பன உள்​ளிட்ட பல்​வேறு நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. இதனால் சென்னை நகருக்​குள் சிஎன்ஜி நிலையத்தை அமைப்​பது நிறு​வனங்​களுக்கு பெரும் சவாலாக இருக்​கிறது. இதனால் தட்​டுப்​பாட்டு நில​வு​கிறது.

சிஎன்ஜி இருக்​கும் இடத்தை அறிந்து எரிபொருள் நிரப்ப தின​மும் 1 மணி நேரம் ஆகிறது. தமிழக அரசே முன்​வந்து இடவசதி ஏற்பாடு செய்து தட்​டுப்​பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இந்த விவ​காரத்தை அரசின் கவனத்​துக்கு எடுத்​துச் செல்லும் வகை​யில் விரை​வில் போ​ராட்​டம் நடத்த உள்​ளோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்.

போக்​கு​வரத்து மற்​றும் சாலை பாது​காப்பு நிபுணர் வளவன் அமுதன் கூறிய​தாவது: சென்​னை​யில் பெரும்​பாலான தனி​யார் நிறு​வனங்​கள் அமைக்​கும் சிஎன்ஜி நிலை​யத்​தில் நிலத்​தின் அடி​யில் டேங்க் அமைப்​ப​தில்​லை. மேற்​புறத்​தில் அமைப்​ப​தால் போ​திய அழுத்​தத்​துடன் சிஎன்​ஜியை நிரப்ப முடி​யாது. இது​போன்ற உட்​கட்​டமைப்பு இல்​லாதது ஆபத்தை விளைவிக்​கும். விலை​யும் மிகப்​பெரிய சிக்​கலாக இருக்​கிறது.

எண்​ணெய் நிறு​வனங்​களை விலை நிர்​ண​யிக்க உத்​தர​விட வேண்​டும். வாகன விற்​பனைக்கு ஏற்ப சிஎன்ஜி விநியோகத்​துக்​கான நடவடிக்​கையை அரசு துரிதப்​படுத்த வேண்​டும். தற்​போதுள்ள விலை​யை​யும் குறைக்க வேண்​டும். அதே​நேரம், கழி​வில் இருந்து எடுக்​கப்​படும் சிபிஜி வாயு (1 கிலோ ரூ.70) நிலை​யத்தை அமைப்​ப​தி​லும் தொழில்​துறை ஊக்​கு​வித்து முனைப்பு காட்ட வேண்​டும். இவ்​வாறு தெரி​வித்​தார். ஆட்​டோ​வில் டீசல் பயன்​படுத்​தி​னால் 1 கிமீ-க்கு ரூ.4.62 செல​வாகிறது. இதுவே சிஎன்ஜி பயன்​படுத்​தி​னால்​ ரூ.1.83 மட்​டுமே செலவாகும்.

சிஎன்ஜி விலை (1 கிலோ) – பெங்களூரு – ரூ.89, ஹைதராபாத் – ரூ.96, புதுச்சேரி ரூ.78, விசாகப்பட்டினம் 89, சென்னை – ரூ.91.5.

நன்றி

Leave a Reply