சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, ஒருசில இடங்களில் இன்று (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 5 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆகஸ்ட் 2-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும், 3-ம் தேதி கடலூர். விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
4-ம் தேதி கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்களிலும், 5-ம் தேதி கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.