உத்தரபிரதேசத்தில் உள்ள டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று (16) அதிகாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஏற்பட்ட பயங்கர விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் சுமார் 75 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
யமுனா நெடுஞ்சாலையில் சாலையின் ஆக்ரா-நொய்டா வீதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அடர்ந்த மூடுபனி காரணமாக மோசமான தெரிவுநிலையால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இதனால், தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த உடனேயே தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் மற்றும் அம்பியூன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
