ட்ரம்பின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி – Athavan News

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நீடித்து  வரும் நிலையில் , ரஷ்ய எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு 100% இரண்டாம் நிலை வரிகள் விதிக்கப்படுமென்பதை அறிவித்துள்ளார்.

அமெரிக்க  ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு உலக எண்ணெய் சந்தையில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் நிலை வரிகள் என்பது, அமெரிக்க அரசு  ரஷ்யாவுடன் வியாபாரம் செய்யும் மற்ற நாடுகளின் பொருட்கள் மற்றும் வர்த்தகத்தையும் தடுக்கும் வகையில் விதிக்கு  புதிய வரிகளாகும். இதனால், ரஷ்யாவுடன் வியாபாரம் செய்யும் நாடுகள் அதிர்சியடைந்துள்ளன.

இந்த அறிவிப்பால் இந்தியா மற்றும் சீனா போன்ற ரஷ்ய எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. அமெரிக்காவின்  வரிகள் அமுல்படுத்தப்பட்டால், உலகளவில் எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நன்றி

Leave a Reply