தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்தது: இன்றைய நிலவரம் | Gold rate falls further in Chennai

சென்னை: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்றம், இறக்கம் காணும். அந்தவகையில் சென்னையில் இன்று (அக்.27), 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.91,600-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததன் எதிரொலியாக அதன் விலை சரிவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது நகை வாங்குவோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply