தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைவு | Chennai: Gold, Silver Rate today

சென்னை: தங்கம் விலை இன்று (ஆக.11) பவுனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்ட நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்து ஆறுதல் தந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,375-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.7,745-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.61,960 விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ வெள்ளி 1,27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply