சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது. ஒரு பவுன் விலை ரூ.91 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு பவுன் ரூ.91,280-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1,67,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நவ.1 தொடங்கி தங்கம் விலை நிலவரம்:
நவ.10 ஒரு பவுன் ரூ.91,280
நவ.9 ஒரு பவுன் ரூ.90,400
நவ.8 ஒரு பவுன் ரூ.90,400
நவ 7 ஒரு பவுன் ரூ.90,160
நவ 6 ஒரு பவுன் ரூ.90,560
நவ 5 ஒரு பவுன் ரூ.89,440
நவ 4 ஒரு பவுன் ரூ.90,000
நவ 3 ஒரு பவுன் ரூ.90,800
நவ 2 ஒரு பவுன் ரூ.90,480
நவ 1 ஒரு பவுன் ரூ.90,480
தங்கம் விலை பவுன் ரூ.91 ஆயிரத்தைக் கடந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
