தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை – பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இங்கிலாந்து தம்பதியினருக்கான நீதிமன்ற விசாரணை ஈரானில் முறையாக நடக்கவில்லை என அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் கிழக்கு சசெக்ஸைச் சேர்ந்த லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் இருவரும் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது அவர்கள் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கெர்மானில் காவலில் வைக்கப்பட்ட நிலையில் இருவரும் தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்துள்ளனர்.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள லிண்ட்சேயின் மகன் ஜோ பென்னட், சமீபத்தில் தனது தாயுடன் இரண்டாவது முறையாகப் பேசியதாகக் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை சிறையில் இருந்து அவருக்கு 20 நிமிட அழைப்பு அனுமதிக்கப்பட்டது.

இதன்போது தனது தாய் மிகவும் சோர்வாக பேசியதாகவும், கடந்த தவணை நீதிமன்ற விசாரணைகள் முறையாக நடக்கவில்லை என தன்னிடம் அவர் கூரியதாகவும் லிண்ட்சேயின் மகன் ஜோ பென்னட் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply