தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே பேச்சுவார்த்தை!

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்தியான இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியம் , நெருக்கமான உறவை கொண்டுள்ளன.

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தை , கடந்த 17 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்தது.

ஒரு சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து ஏற்படாததை அடுத்து, 2013ல் இந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

பின்னர் , 2022 ஜூன் மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

இந்த ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க இருதரப்பும் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், கடந்த 4ம் திகதி இந்திய பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருக்கிடையே நடந்த தொலைபேசி உரையாடலில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த அடுத்த சுற்று பேச்சுவார்த்தை டில்லியில் இன்று தொடங்குகிறது.

நன்றி

Leave a Reply