அபுதாபி கிராண்ட் பிரிக்ஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்த பின்னர், பிரித்தானிய வீரர் லாண்டோ நோரிஸ் முதல் முறையாக “ஃபார்முலா வன்” (F1) உலக சாம்பியனானார்.
26 வயதான இவர் இதன் மூலமாக பிரித்தானியாவின் 11 ஆவது F1 உலக சாம்பியனானார்.
மேலும் 2008 ஆம் ஆண்டு லூயிஸ் ஹாமில்டனுக்குப் பின்னர் பட்டத்தை வென்ற முதல் மெக்லாரன் குழுவின் சாரதி ஆவார்.
அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2025 ஃபார்முலா வன் உலக சாம்பியன் இறுதி போட்டியில் அடைந்த வெற்றியின் மூலமாக, வெர்ஸ்டாப்பனின் நான்கு ஆண்டுகால சாம்பியன் ஆட்சியை நோரிஸ் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது ‘“ஃபார்முலா வன்”‘ பந்தயமாகும்.
இந்த ஆண்டுக்கான ‘“ஃபார்முலா வன்”‘ கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்பட்டது.
இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.
