திவுலப்பிட்டிய, துனகஹா பகுதியில் மூன்று பேர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், கத்தி மற்றும் பொல்லுகளால் குறித்த நபர் தாக்கப்பட்டதுடன் பலத்த காயமடைந்த நபர் திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மடம்பலே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய திவுலப்பிட்டிய பொலிஸார் குழுவொன்றை நியமித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.