TTDC Recruitment 2026: தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் (TTDC) காலியாக உள்ள 04 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிவில் இன்ஜினியர் (Site Engineer – Civil), இளம் கட்டிடக் கலைஞர் (Junior Architect) மற்றும் உதவி பொது மேலாளர் (AGM – Marketing) ஆகிய முக்கியப் பதவிகள் காலியாக உள்ளன. இந்தத் துறைகளில் ஆர்வம் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள், வரும் 23.03.2026-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
TTDC Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC) Tamil Nadu Tourism Development Corporation (TTDC) |
| காலியிடங்கள் | 04 |
| பணிகள் | Junior Architect, Site Engineer (Civil), AGM (Marketing) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 23.03.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://ttdconline.com/ |
TTDC Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
| ஜூனியர் ஆர்க்கிடெக்ட் (Junior Architect) | 01 |
| சிவில் இன்ஜினியர் (Site Engineer – Civil) | 02 |
| உதவி பொது மேலாளர் (AGM – Marketing) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TTDC Recruitment 2026 கல்வித் தகுதி
| பணியின் பெயர் | கல்வித்தகுதி மற்றும் அனுபவம் |
| ஜூனியர் ஆர்க்கிடெக்ட் (Junior Architect) | கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் (B.Arch) + 2 ஆண்டுகள் அனுபவம். |
| சிவில் இன்ஜினியர் (Site Engineer – Civil) | சிவில் இன்ஜினியரிங்கில் இளங்கலை பட்டம் (B.E/B.Tech Civil) + 5 ஆண்டுகள் அனுபவம். |
| உதவி பொது மேலாளர் (AGM – Marketing) | MBA (Marketing / Tourism / Business Administration) + 5 ஆண்டுகள் அனுபவம். |
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- விண்ணப்பங்கள் பரிசீலனை (Short Listing): தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பட்டியலிடப்படுவர்.
- நேர்காணல் (Interview): தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 11.03.2026
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.03.2026
TTDC Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2026 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- இணையதளத்திற்குச் செல்லுதல்: முதலில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tamilnadutourism.tn.gov.in/recruitment என்ற முகவரிக்குச் செல்லவும்.
- பிரிவைத் தேர்வு செய்தல்: இணையதளத்தில் உள்ள ‘Recruitment’ (வேலைவாய்ப்பு) என்ற பக்கத்தைத் தேர்வு செய்யவும்.
- அறிவிப்பைப் படித்தல்: அங்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) முழுமையாகப் படித்து, அதில் உள்ள வழிமுறைகளை கவனமாகப் புரிந்துகொள்ளவும்.
- விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தல்: ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை (Documents) பதிவேற்றம் செய்யவும்.
- சமர்ப்பித்தல்: விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த (Submit) பிறகு, எதிர்காலக் குறிப்பிற்காக உங்கள் விண்ணப்ப எண்ணை (Application Number) மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய குறிப்புகள்:
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 11.03.2026 முதல் 23.03.2026 வரை மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
- மேலும் தகவல்களை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படித்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.



