2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் இரண்டாயிரத்து 787 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 க்குள் அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் மாணவர்கள் காலை 09 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கூறியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதி காலை 9:30 முதல் 10:45 வரை நடைபெறும் எனவும் அதனைத் தொடர்ந்து முதலாம் பகுதி காலை 11:15 முதல் மதியம் 12:15 வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
பரீட்சை இடம்பெறும் சந்தர்ப்பங்களின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு அளிக்க முடியும் எனவும் இதற்காக விசேட திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார்.