தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் அன்டஸ் மலைத்தொடரில் எல் டெனிண்டி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான தாமிர சுரங்கத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாங்கியுள்ளது.
இதன்போது சுரங்கத்தில் 15 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இதை அடுத்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் . மேலும் 5 பேர் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.