தாயகம் திரும்பினார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம்-4’ திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தில் விண்வெளிக்கு சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் 18 நாட்கள் வரை அங்கு தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.

இவர்களுடைய ஆராய்ச்சி பணி நிறைவடைந்ததும், கடந்த ஜூலை 15 ஆம் திகதி பூமிக்கு திரும்பினர்.

விண்கலம், வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இதனால், 41 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுக்லா பெற்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை (17) அவர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சுக்லாவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லியின் முதல்-மந்திரி ரேகா குப்தா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதேவேளை, விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய பின்னர் இன்றுதான் அவர் தாயகம் திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply