குவைத்தைச் சேர்ந்த சிறுவன் தனது தாயின் வங்கி அட்டையை எடுத்து, நோன்பு திறப்பதற்குரிய பொருட்களை வாங்கி மக்களுக்கு விநியோகித்த நிகழ்வு வைரலாகியுள்ளது.
சிறுவனது சகோதரர்கள் இதுபற்றி அவனிடம் விசாரித்தபோது நான் ரமழான் மாதத்தில் தர்மம் செய்கிறேன். உங்களுக்கு நன்மை செய்கிறேன். ஏன் எனக்கு தீங்கிழைக்கிறீர்கள் என கேட்டுள்ளான். சரி, அவற்றை நீ விநியோகித்து விட்டு வா என, அவனது விநியோகத்திற்கு இடமளித்து விட்டு பின்னர் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

