தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு!

தாய்லாந்தின் அடுத்த பிரதமராக Bhumjaithai கட்சியின் 58 வயது தலைவரான அனுடின் சார்ன்விரகுலை (Anutin Charnvirakul) அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.

தாய்லாந்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் வம்சத்தைச் சேர்ந்த பேடோங்டர்ன் ஷினாவத்ரா, கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையைக் கையாண்டதில் நெறிமுறை மீறல்களுக்காக கடந்த வாரம் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அனுட்டினின் Bhumjaithai கட்சி, ஷினவத்ராக்களின் பியூ தாய் தலைமையிலான கூட்டணியிலிருந்து பிரிந்து பிரதமர் பதவியை வெல்வதற்கு நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவைப் பெற்றது.

எனினும், அண்மைய காலங்களில் நீதிமன்றத் தலையீடுகள் மற்றும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளால் பல நிர்வாகங்கள் அகற்றப்பட்ட தாய்லாந்தின் நிச்சயமற்ற தன்மை இன்னும் தீர்ந்துவிடவில்லை.

நன்றி

Leave a Reply