நண்பரும், எழுத்தாளரும், ஆசிரியரும் , ஆன்மீகக் கருத்தாளருமான எஸ். நஸீறுத்தீன் அவர்களின் அருமை மகன், எல்லோரையும் அன்பினாலும் அடக்கத்தினாலும் வசீகரிக்கக் கூடிய பல்துறை ஆளுமைமிகு இளைஞரான நஸீறுத்தீன் நுஸ்கி அவர்கள் , பொதுப்பணி முடிந்து விட்டு நள்ளிரவு தாண்டி வீடு வந்து உறங்கியவர் , கடந்த 15ம் திகதி SLOUGH வில் எதிர்பாரத வகையில் மரணித்தார்.
33 வயது, பொறியியலாளர், SLOUGH உள்ள இலங்கை முஸ்லிம் சமூக அமைப்பில் இணைச் செயலாளராக பணியாற்றியவர். சமூக சேவையாளர், விளையாட்டுத்துறை பயிற்ச்சியாளர், ஆன்மீகத்துறை ஈடுபாட்டாளர். அனைத்து மனிதர்களையும் அன்புடனும் பரிவுடனும் அணுகக்கூடிய பக்குவத்தினை இளம் வயதிலே பெற்ற அவர், தனது தாய் தகப்பன், மனைவி, 14 மாத மகன், இரு சகோதரிகளை விட்டு சென்ற துயரை அவர்களே அறிவர், அவர்களே உணர்வர். எந்த ஆறுதல் வார்த்தைகளும் அந்த இழப்புக்கு ஈடாகாதுதான்.
துயரத்திலும், சோகத்திலும் மிகப் பெரிது, தம் பிள்ளையை , கணவனை இழப்பது…. செல்வந்தர், ஏழை, சிறியவர், பெரியவர் அனவருக்கும் நிரந்தமானது மரணம்தானே. சகோதரர் நுஸ்கியின் பண்பையும் அறிவையும், சமூக ஈடுபாட்டையும் பற்றித்தான் இந்த திடீர் இழப்புச் செய்தி அறிந்தவுடன் அனைவரும் ஒயாது பேசுகின்றனர்.
தாங்கொண்ணாத்துயரத்தில் இருக்கும் உங்களுடன் நாம் எமது உணர்வுத் தோழமையை மட்டுமே வெளிப்படுத்த முடியும்.
எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸில் உயர்ந்த இடத்தை வழங்குவானாக..🤲
Fauzer Mahroof

