தினசரி 1ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய ‘ஜியோ’ டெலிகாம் நிறுவனம்! | Telecom company Jio has discontinued daily 1GB data recharge plan

மும்பை: முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதன் தினசரி 1ஜிபி மொபைல் டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்தியுள்ளது. இதனால் இப்போது மொபைல் டேட்டா தேவைப்படும் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.299 என்ற பிளானின் கீழ் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முதன்மையானதாக திகழும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கடந்த 2016-ல் தான் இந்த நிறுவனம் பொது பயன்பாட்டுக்கு சேவையை வழங்கி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் டெலிகாம் சந்தையில் கிடுகிடுவென வளர்ச்சி கண்டது. அதற்கு காரணம், அந்த நிறுவனத்தின் ஆரம்ப கால ரீசார்ஜ் திட்டங்கள்.

இந்த சூழலில் தினசரி 1ஜிபி மொபைல் டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களான ரூ.209 (22 நாட்கள் வேலிடிட்டி) மற்றும் ரூ.249 (28 நாட்கள் வேலிடிட்டி) திட்டத்தை ஜியோ நிறுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் அழைப்புகள் மேற்கொள்ள முடியும். இந்த நிலையில்தான் இது நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாளொன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கும் ரூ.299 (28 நாட்கள் வேலிடிட்டி) அல்லது ரூ.198 (14 நாட்கள் வேலிடிட்டி) திட்டத்தின் கீழ் பயனர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டி கட்டாயத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த திட்டத்தில் அழைப்புகளை மட்டுமே அன்லிமிடெட்டாக மேற்கொள்ள முடியும். நாளொன்றுக்கு 2ஜிபி மொபைல் டேட்டா திட்டம் அல்லது அதற்கு மேல் உள்ள திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி பெறமுடியும்.

நன்றி

Leave a Reply