BHEL Trichy Recruitment 2025: மத்திய அரசு திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) பெல் நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள 760 அப்ரண்டிஸ் (Graduate Apprentice, Technician Apprentice, Trade Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
BHEL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் Bharat Heavy Electricals Limited (BHEL) |
காலியிடங்கள் | 760 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 15.09.2025 |
பணியிடம் | தமிழ்நாடு – திருச்சி |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
www.bhel.com |
BHEL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
திருச்சி பெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Graduate Apprentice | 120 |
Technician Apprentice, | 90 |
Trade Apprentice | 550 |
மொத்தம் | 760 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Graduate Apprentice | 10+2 மற்றும் இன்ஜினியரிங் / டெக்னாலஜி / காமர்ஸ் (B.Com.) / ஆர்ட்ஸ் (B.A) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் முழு நேரப் பட்டப்படிப்பு (Regular full time) முடித்திருக்க வேண்டும். |
Technician Apprentice | 1.உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி (High School Pass). 2.அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் முழு நேர டிப்ளமோ (Full time Diploma) முடித்திருக்க வேண்டும். 3.UR / OBC (NCL) / EWS விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும், SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 50% மதிப்பெண்களும் தேவை. 4.2021, 2022, 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 5.தொலைதூரக் கல்வி (Distance Learning) / பகுதி நேரப் படிப்புகள் (Part Time) / கடிதப் போக்குவரத்து (Correspondence) / Sandwich படிப்புகள் மூலம் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. |
Trade Apprentice | 1.உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி (High School Pass). 2.NCVT / SCVT அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் முழு நேர ITI (Regular Full Time ITI) முடித்திருக்க வேண்டும். 3.Welder வர்த்தகத்திற்கு (Trade) NCVT சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 4.முழு நேர ITI படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். |
வயது வரம்பு விவரங்கள்
திருச்சி பெல் நிறுவனம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
உயர் வயது வரம்பு தளர்வு:
வகை | வயது தளர்வு |
SC/ ST Applicants | 5 years |
OBC Applicants | 3 years |
PwBD (Gen/ EWS) Applicants | 10 years |
PwBD (SC/ ST) Applicants | 15 years |
PwBD (OBC) Applicants | 13 years |
Ex-Servicemen Applicants | As per Govt. Policy |
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Graduate Apprentice | மாதம் ₹12,000/- |
Technician Apprentice | மாதம் ₹11,000/- |
Trade Apprentice | மாதம் ₹11,050/- |
தேர்வு செயல்முறை
திருச்சி பெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2025
BHEL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தேவையான ஆவணங்களையும் இணைத்து 28.08.2025 முதல் 15.09.2025-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்கும் தேதி: 28.08.2025 முதல் 15.09.2025 வரை.
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே.
ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய முழுமையான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாகக் காணலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, உங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
BHEL Trichy Trade Apprentice அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click here |
BHEL Trichy Technician Apprentice அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click here |
BHEL Trichy Graduate Apprentice அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click here |
Enrolment number Registration Link for Trade Apprentice | Click here |
Enrolment number Registration Link for Technician/Graduate Apprentice | Click here |
BHEL Trichy அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |