திருநகாில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

by admin



யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம்  காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 539 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயது உடையவர்கள் ஆவார்கள். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம்  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

நன்றி

Leave a Reply