திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர்

திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளிக்க முன்வந்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க தொழில் அதிபர் ஒருவர் முன்வந்து இருப்பதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது ”தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார். இதன் மதிப்பு இந்திய மதிப்பில்  140 கோடியாகும். புதிதாக தொடங்கிய நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதால் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்து இருக்கிறார். தனது நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் முலம் அவருக்கு 7 ஆயிரம் கோடி  லாபம் கிடைத்துள்ளது. எனவே அதில் ஒரு பங்கை ஏழுமலையானுக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாக  இருக்கிறார்” என்றார்.

எனினும், அந்த தொழில் அதிபர் யார் என்ற விவரத்தை வெளியிட சந்திரபாபு நாயுடு மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply