வீரஞ் செறிந்த நகரத்து குழந்தைகள் பசியோடும் பட்டினியோடும் போராடிக் கொண்டிருப்பதைச் சித்திரிக்கின்ற படங்கள் மறுமை நாள் வரை முஸ்லிம் சமுதாயத்தின் தூக்கத்தைப் பறித்துவிடும். துரத்திக் கொண்டே இருக்கும். மிகப் பெரும் அவமானமாக உறுத்திக் கொணடே இருக்கும்.
நெஞ்சைப் பிழியச் செய்கின்ற இந்தப் படங்கள் ஒரு பக்கம் மிகப் பெரும் மனிதத் துயரத்தை உணர்த்துகின்றன. மறுபக்கமோ இந்த அளவுக்கு துயரத்துக்கும் துன்பத்துக்கும் ஆளான நிலையிலும் ஊரை விட்டு ஓடிப் போய்விடாமல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற அந்த மக்களின் உணர்வையும் உணர்த்துகின்றன.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Azeez Luthfullah