தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலர் அவரது மனைவியான கிம் கியோன் ஹீயும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பங்குகளின் மதிப்பை உயர்த்தும் மோசடியில் ஈடுபட்டமை தேர்தல் தலையீடு, லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கிம் கியோன் ஹீ மீது சுமத்தப்பட்டுள்ளன. தென் கொரிய கட்டுமான நிறுவனம் வழங்கிய 43,000 டொலர் மதிப்புள்ள பதக்கம் குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவி கிம்மும் வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரே சமயத்தில் சிறையில் வைக்கப்பட்டுள்ள முதல் ஜனாதிபதி தம்பதி இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதுர் .
The post தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவியும் கைது appeared first on Global Tamil News.