தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியோங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணைந்து இம்மாதம் 25-ஆம் திகதி வொஷிங்டனில் முதன்முறையாக உச்சி மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர்.
இம்மாநாட்டில் இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு கூட்டாண்மை, பொருளாதார ஒத்துழைப்பு, மற்றும் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தித் துறைகளில் விரிவான கூட்டாண்மையை மேம்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, முக்கிய கனிமங்கள், குறைகடத்திகள் (semiconductors), பட்டரிகள் மற்றும் கப்பல் கட்டுமானத் துறைகளில் இணைந்து செயல்படுவது, வரிவிதிப்புகள் மற்றும் வர்த்தகச் சவால்களை சமாளிப்பது போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாடு, இரு நாடுகளுக்கு இடையேயும் காணப்படும் உறவு, பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.