தெற்கு ஈரான் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழப்பு!

தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு ஈரானில் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் நேற்று (19) 55 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு திடீரென வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 34பேர் படுகாயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply