முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை காவற்துறை மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான கடிதத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசபந்து தென்னகோன்னை பதவி நீக்கப்பட்டது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன குறித்த கடிதத்தை சமர்ப்பித்திருந்தாா்.
அரசியலமைப்பு சபையிடம் காவற்துறை மா அதிபர் பதவிக்கு ஒரு வேட்பாளரை ஜனாதிபதி பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, பெரும்பான்மை ஒப்புதலின் அடிப்படையில் புதிய காவற்துறை மா அதிபர் நியமிக்கப்படுவார்.
தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் முன்மொழிவு தொடா்பான வாக்கெடுப்பு நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போது , தீர்மானத்திற்கு ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எதுவும் அளிக்கப்படவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் வாக்களிப்பிலிருந்து விலகி இருந்தார். அதன்படி, தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்க குழு ஒருமனதாக பரிந்துரைத்தது.
தென்னகோன் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பதவியில் தவறான நடத்தை ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.