NHSRCL Recruitment 2025: தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (National High Speed Rail Corporation Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள 36 Assistant Technical Manager (S&T), Junior Technical Manager (S&T) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
NHSRCL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) National High Speed Rail Corporation Limited (NHSRCL) |
காலியிடங்கள் | 36 |
பணிகள் | Assistant Technical Manager (S&T), Junior Technical Manager (S&T) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 15.09.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.nhsrcl.in/ |
NHSRCL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Assistant Technical Manager (S&T) | 18 |
Junior Technical Manager (S&T) | 18 |
மொத்தம் | 36 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
NHSRCL பணிகளுக்கான கல்வித் தகுதி
- Assistant Technical Manager (S&T): அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் Electronics/ Electronics & Communications/ Electrical/ Electrical & Electronics/ Computer Science/ Information Technology ஆகிய துறைகளில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பணி விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குறைந்தபட்சம் நான்கு வருட பணி அனுபவம் அவசியம்.
- Junior Technical Manager (S&T): அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் Electronics/ Electronics & Communications/ Electrical/ Electrical & Electronics/ Computer Science/ Information Technology ஆகிய துறைகளில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பணி விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு விவரங்கள்
NHSRCL பணிகளுக்கான வயது வரம்பு (31.07.2025 நிலவரப்படி):
- Assistant Technical Manager (S&T) – 45 வயது
- Junior Technical Manager (S&T) – 45 வயது
வயது வரம்பு தளர்வு:
- SC/ ST விண்ணப்பதாரர்கள்: 5 வருடங்கள்
- OBC விண்ணப்பதாரர்கள்: 3 வருடங்கள்
- PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்கள்: 10 வருடங்கள்
- PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்கள்: 15 வருடங்கள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 வருடங்கள்
- முன்னாள் ராணுவத்தினர்: அரசு கொள்கையின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் (ரூபாய்) |
Assistant Technical Manager (S&T) | ரூ.50,000/- |
Junior Technical Manager (S&T) | ரூ.40,000/- |
NHSRCL Recruitment 2025 தேர்வு செயல்முறை
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Screening of applications, Document Verification
- Personal Interview (தனிப்பட்ட நேர்காணல்)
NHSRCL Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: ₹400/-
கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
NHSRCL Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள்: 26.08.2025
- ஆன்லைன் பதிவு முடிவடையும் நாள்: 15.09.2025
NHSRCL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.08.2025 முதல் 15.09.2025 தேதிக்குள் www.nhsrcl.in என்ற இணையதளத்தில் சென்று Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தின் அச்சுப்படியுடன், தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் (சுயசான்றொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்) கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager/HR,
National High Speed Rail Corporation Limited,
World Trade Centre, 5th Floor, Tower D,
Nauroji Nagar, New Delhi – 110029.
விண்ணப்பத்தை அனுப்பும் உறையின் மீது, “Application for the post of <>, Vacancy Notice No. <>” என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |