தேர்வு கிடையாது…தென் கிழக்கு ரயில்வே துறையில் வேலை – 1785 காலியிடங்கள்! SER Recruitment 2025

SER Recruitment 2025: தென்கிழக்கு ரயில்வே துறையின் (South Eastern Railway – SER) ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (Recruitment Cell), தற்போது காலியாகவுள்ள 1785 Apprentices (அப்ரண்டீஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 17.12.2025. இந்த முக்கியமான அறிவிப்பின் மூலம், இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி என்ன?, விண்ணப்பிக்கும் முறை என்ன?, வயது வரம்பு எவ்வளவு? மற்றும் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பது உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய விவரங்களையும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் Railway Recruitment Cell
ரயில்வே ஆட்சேர்ப்பு செல்
தெற்கு ரயில்வே
காலியிடங்கள் 1785
பணிகள் Apprentices (அப்ரண்ட்டிஸ்)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 17.12.2025
பணியிடம் தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.rrcser.co.in/

தென்கிழக்கு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி (Post) காலியிடங்கள் (Vacancies)
Apprentices (அப்ரண்ட்டிஸ்) 1785

அப்ரண்ட்டிஸ் பணிக்குத் தேவையான கல்வித் தகுதி:

  • கல்வி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் (10+2 தேர்வு முறையில் 10-ஆம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மதிப்பெண்: மொத்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 50% பெற்றிருக்க வேண்டும் (கூடுதல் பாடங்களைத் தவிர்த்து).
  • தொழில் பயிற்சி: சம்பந்தப்பட்ட டிரேடில் (Trade) ஐ.டி.ஐ (ITI) தேர்ச்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்ச வயது: 15 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது: 24 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

வயதுத் தளர்வு (Age Relaxation)

விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் வயது வரம்புத் தளர்வுகள்:

பிரிவு (Category) வயதுத் தளர்வு (Age Relaxation)
SC / ST (பட்டியல் சாதிகள் / பழங்குடியினர்) 5 ஆண்டுகள்
OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) (மாற்றுத்திறனாளிகள் – பொது / பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு) 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) (மாற்றுத்திறனாளிகள் – SC / ST) 15 ஆண்டுகள்
PwBD (OBC) (மாற்றுத்திறனாளிகள் – OBC) 13 ஆண்டுகள்
பதவி (Post) சம்பளம் (Salary)
Apprentices (அப்ரண்ட்டிஸ்) அப்ரண்ட்டிஸ் பணிக்கு தோராயமாக ரூ. 15,000/- சம்பளம்

தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்ட்டிஸ் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, பின்வரும் இரண்டு முக்கிய நிலைகளைக் கொண்டுள்ளது:

1. தகுதிப் பட்டியல் தயாரித்தல் (Merit List Preparation)

  • இந்தப் பணிக்கு எந்தவித எழுத்துத் தேர்வும் (Written Exam) அல்லது நேர்முகத் தேர்வும் (Interview) நடத்தப்படாது.
  • விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு (Matriculation) மற்றும் ஐ.டி.ஐ (ITI) தேர்வுகளில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் சராசரி சதவீதத்தின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merit List) தயாரிக்கப்படும். உதாரணமாக: (10-ஆம் வகுப்பு மொத்த மதிப்பெண் சதவீதம் + ஐ.டி.ஐ மொத்த மதிப்பெண் சதவீதம்) / 2 என்ற அடிப்படையில் இறுதிச் சதவீதம் கணக்கிடப்படலாம்.
  • இந்தப் பட்டியலில் அதிக மதிப்பெண்களைப் பெறும் விண்ணப்பதாரர்கள், அடுத்த நிலையான ஆவணச் சரிபார்ப்புக்குத் (Document Verification) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

2. ஆவணச் சரிபார்ப்பு (Document Verification – DV)

  • தகுதிப் பட்டியலில் (Merit List) தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, ஆவணச் சரிபார்ப்பில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் உள்ள அனைத்துத் தகவல்களும், அவர்கள் நேரில் கொண்டுவரும் அசல் சான்றிதழ்களுடன் சரிபார்க்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • SC/ST, PWD, பெண்கள் – கட்டணம் இல்லை
  • மற்ற அனைத்தும் – ரூ.100/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 18.11.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள்: 17.12.2025

தென்கிழக்கு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 18.11.2025 முதல் 17.12.2025 தேதிக்குள் https://www.rrcser.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முதலில், இணையதளத்தில் பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான அறிவிப்பு PDF-ஐப் பார்வையிடலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply