Repco Bank Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள அரசு ரெப்கோ வங்கியில் காலியாகவுள்ள 10 Marketing Associate (மார்க்கெட்டிங் அசோசியேட்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி?, வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Repco Bank Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ரெப்கோ வங்கி |
காலியிடங்கள் | 10 |
பணிகள் | Marketing Associate (மார்க்கெட்டிங் அசோசியேட்) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 05.08.2025 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.repcobank.com/careers |
Repco Bank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:
- Marketing Associate (மார்க்கெட்டிங் அசோசியேட்) – 10 காலியிடங்கள்
குறிப்பு: மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Repco Bank Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு ரெப்கோ வங்கி மார்க்கெட்டிங் அசோசியேட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கிகாரம் பெற்ற பிறகு கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Graduate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு ரெப்கோ வங்கி மார்க்கெட்டிங் அசோசியேட் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் மாதம் ரூ.15,000/- + ரூ.150/- ஒரு நாளைக்கு வழங்கப்படும். சம்பளம் மற்றும் பிற சலுகைகள் குறித்த முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
ரெப்கோ வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்த மேலும் விவரங்கள் மற்றும் தளர்வுகள் ஏதும் இருந்தால், அது வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே, விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்ப்பது அவசியம்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு ரெப்கோ வங்கி மார்க்கெட்டிங் அசோசியேட் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025
Repco Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.repcobank.com மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை அச்சு எடுத்து, அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்யவும். பின்னர், தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்களின் நகல்களை (self-attested copies) விண்ணப்பத்துடன் இணைக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் 05.08.2025 தேதிக்குள் அனுப்பவும்:
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |