தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு அரசாங்கத்தால் நாடு ஆளப்படுகிறது – சஜித்

இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்று, இன்று நாட்டின் 2.2 மில்லியன் மக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளனர். புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்கவோ, மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்கவோ முடியாது போயுள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் சார் பிரச்சினை எழுகிறது. இதற்கும் எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு அரசாங்கத்தால் நாடு ஆளப்படுகிறது. 

(எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச)

நன்றி

Leave a Reply