தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான (Number Portability -NP) சேவையை அடுத்த வருடம் அமுல்படுத்த (TRCSL) நடவடிக்கை எடுத்துள்ளது.
தொலைபேசி இயக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தயாரிக்கப்பட்ட தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.