தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட பெண் கைது!

சட்டவிரோதமாக தொல்பொருட்களைத் தோண்டிக்கொண்டிருந்த 29 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (21) காலை அத்திமலை பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அத்திமலை பொலிஸ் குழு ஒன்று சம்பந்தப்பட்ட இடத்தை சோதனை செய்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், அந்த இடத்தில் இருந்த மற்ற சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் அவருக்குச் சொந்தமானது என்று சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிள் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அத்திமலை, கெமுனுபுர பகுதியைச் சேர்ந்தவர்.

தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்ய அத்திமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply