நடிகர் விஜய் கைது செய்யப்படுவாரா? – தமிழக முதலமைச்சரின் பதில் இதோ… – Lanka Truth | தமிழ்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் தலைமையில் தமிழ்நாடு – கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்குபட்டு 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கரூர் உயிர்கள் பலியான விடயம் தொடர்பில் நடிகர் விஜய் கைது செய்யப்படுவாரா என்று ஊடகவியலாளர் ஒருவர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் ஆராய உயர் நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையகம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் உண்மைகள் வெளிவரும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் இதுவரை நடக்கவும் இல்லை. இனிமேல் நடக்கக் கூடாதது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையம் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நடந்த, த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரத்தில் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட, 39 பேர் உயிரிழந்துள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


2

நன்றி

Leave a Reply