நடுவானில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாடு வானில் மோதிக்கொண்ட இரண்டு விமானங்களில் ஒரு விமானம் தீப்பற்றி எரிந்ததோடு , மற்றொரு விமானம் அடையாளம் தெரியாத அளவுக்கு உருகுலைந்து போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ்னு 172 மற்றும் EA300 ரக விமானங்கள், கொலரடோ விமான நிலையத்தை நெருங்கி வந்த போது, எதிர்பாராத விதமாக நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன எனவும் இதில் ஒரு விமானத்தில் தீப்பிடித்து எரிந்ததாகவும், மற்றொரு விமானம் கடுமையாக சேதமடைந்துள்ளது எனவும் அமெரிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களை விரைவாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவும் உதவியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை விபத்துக்கான காரணம் குறித்து தெரியவராத நிலையில் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விபத்தில் சிக்கிய விமானங்களில் இருந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply