நமீபியாவை வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி! – Athavan News

புது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் 10 ஆவது போட்டியில், நெதர்லாந்து அணி நமீபியாவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களை எடுத்தது.

நமீபியா சார்பில் ஜான் நிக்கோல் லோஃப்டி-ஈடன் 42 ஓட்டங்களையும், ஜான் ஃப்ரைலின்க் 30 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

பின்னர் சேஸிங்கில் நெதர்லாந்து அணி, இரண்டு ஓவர்கள் மற்றும் 7 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் இலக்கினை எட்டியது.  

48 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்த பாஸ் டி லீட், இன்னிங்ஸை நங்கூரமிட்டு நெதர்லாந்து அணியை ஒரு அபாரமான வெற்றிக்கு அழைத்துச் சென்றதுடன், போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

இதேவேளை இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் 2026 ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தின் 11 ஆவது போட்டியில் நியூஸிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியானது சென்னை, சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும்.

அதேநேரம், இன்றிரவு 07.00 மணிக்கு ஆரரம்பமாகும் தொடரின் 12 ஆவது போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டியானது கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Image

நன்றி

Leave a Reply