நயினார் நாகேந்திரன்  –  எச். ராஜா  உள்ளிட்ட பல பாஜகவினா் கைது   – காரணம் என்ன?

 பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த தலைவரான எச். ராஜா உள்ளிட்டோர் இன்று (டிசம்பர் 4, 2025) கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி அரசியல் களத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

 திரு. நயினார் நாகேந்திரன் மற்றும் எச். ராஜா ஆகியோருடன் சில பாஜக நிர்வாகிகளும், இன்று திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி தீபம் ஏற்ற முயன்றதாகத் தெரிகிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் , தடையை மீறி செயல்பட்டதால்   அவர்கள் கைது செய்யப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தங்கள் தலைவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, பாஜகவினர்  நாகர்கோவில் மற்றும் மன்னார்குடி உட்படப் பல பகுதிகளில் உடனடியாகப் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரையும் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

இந்தத் திடீர் கைது நடவடிக்கை, தமிழக அரசியல் களத்தில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தொண்டர்கள் மத்தியில் இந்தச் செயல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நன்றி

Leave a Reply